Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழனிச்சாமியை நினைச்சா பாவமா இருக்கு!.. தவெக அருண்குமார் பேட்டி..

Advertiesment
eps vijay
புலி படத்தில் நடித்ததற்காக தான் வாங்கிய சம்பளத்தில் 15 கோடியை மறைத்ததாக சொல்லி வருமான வரித்துறை விஜய்க்கு 1.50 கோடி அபராதம் விதித்தது. ஆனால் காலதாமதமாக தனக்கு அபராதம் வழங்கியதாக சொல்லி விஜய் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக வெளியான தீர்ப்பில் விஜய்க்கு வருமானவரித்துறை விதித்த அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இது விஜய்க்கு பின்னடைவை ஏற்படுத்தியது..

இதை வைத்து நாம் தமிழர் கட்சி, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தன. ‘சம்பளத்தை மறைத்து வரி கட்டாமல் ஊழல் செய்த விஜய் ஊழலை ஒழிக்கிறேன் என்று பேசலாமா?’ என்றெல்லாம் அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்தனர். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் இது பற்றி செய்தியாளிடம் பேசிய போது ‘நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விஜய் ஊழல் செய்தது உறுதியாகியிருக்கிறது.. இவர் ஊழல் கட்சி என எங்களை பற்றி பேசுகிறார்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித் தவெக நிர்வாகி அருண் ராஜ் ‘எந்த பதவியிலும் இல்லாத விஜய் செய்தது ஊழல் கிடையாது.. எதை வைத்து விஜய் ஊழல் செய்தார் என எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார் என தெரியவில்லை.. அவரை நினைத்தால் பாவமாக இருக்கிறது.. பொத்தாம் பொதுவாக வரி ஏய்ப்பு என கூறக்கூடாது.. அவர் முதல்வராக இருந்திருக்கிறார்.. ஊழல் என்றால் என்னவென்று அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்..

காலம் தாழ்த்தி ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது.. அதை சட்டப்படி எதிர்த்து மனு தாக்கல் செய்தோம். நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என அவர் கூறியிருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்புமணிக்கே பாமக!.. உறுதி செய்த தேர்தல் ஆணையம்!. ராமதாஸ் அதிர்ச்சி...