கோவில் பிரசாதத்தில் ரசாயனம் கலக்க தீவிரவாதிகள் திட்டம்.. அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வியாழன், 13 நவம்பர் 2025 (15:59 IST)
பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19 ஆம் தேதி கோவைக்கு வருவதாக தெரிவித்தார். தென்னிந்திய இயற்கை விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இயற்கை விவசாய மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
 
இந்த மாநாட்டில் அவர் சுமார் 5,000 இளம் விவசாயிகளுடனும், 50 இயற்கை விஞ்ஞானிகளுடனும் கலந்துரையாட உள்ளார். பிரதமரின் இந்த வருகை முற்றிலும் விவசாயம் சார்ந்த நிகழ்வு மட்டுமே என்றும், இதில் எந்த அரசியல் கட்சி நிகழ்ச்சிகளும் இல்லை என்றும் அண்ணாமலை திட்டவட்டமாகக் கூறினார்.
 
மேலும், அண்ணாமலை ஒரு அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டார். குஜராத் மருத்துவர்கள் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கோவில் பிரசாதங்களில் ரசாயனம் கலந்து பலரை கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். 
சந்தேகம் வராமல் இருக்க மருத்துவர்களை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். மும்பை தாக்குதல் போல டெல்லியில் நடத்தவே இந்த சதி என்று அவர்கள் கூறியுள்ளனர். 
 
இந்தக் கொடிய செயலை அனைத்துக் கட்சிகளும் இணைந்து வேரோடு களைய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராக் பஸ்வான் துணை முதல்வர்? பிகார் அரசியலில் எழுச்சி

இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கான வாய்ப்பு?

பிஹாரில் மறு வாக்குப்பதிவு இல்லாத முதல் தேர்தல் .. ஆச்சர்யமான தகவல்

தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி! - பவுனுக்கு இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் இத்தனை லடசம் ஓட்டுக்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments