இந்தியாவில் நவீன இரயில் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பனாரஸ் இரயில் நிலையத்திலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் விரைவு இரயில்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த புதிய இரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இரயில் சேவையை மேலும் விரிவுபடுத்துகின்றன.
புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்கள் பின்வரும் வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன:
பனாரஸ் – கஜுராஹோ
லக்னோ – ஷஹாரான்பூர்
பிரோஸ்பூர் – டெல்லி
எர்ணாகுளம் – பெங்களூரு
குறிப்பாக, எர்ணாகுளம் – பெங்களூரு இரயில் சேவை, தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய வழித்தடங்கள் வழியாக செல்கிறது.
புதிய இரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிறகு, பிரதமர் மோடி அவர்கள் பனாரஸ்–கஜுராஹோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணித்து, அதில் இருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.