காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

Mahendran
வியாழன், 13 நவம்பர் 2025 (15:11 IST)
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிரடியாக 2வது முறை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 2,400 உயர்ந்ததால், தங்கம் விலை ரூ. 95,000 என்ற எல்லையை கடந்து விற்பனையாகிறது.
 
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 92,800-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை முதல் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
இன்று காலை கிராமுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 11,800-க்கும், சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்து ரூ. 94,400-க்கும் விற்கப்பட்டது.இந்த நிலையில் மீண்டும் பிற்பகலில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து, மொத்தமாக ஒரே நாளில் ரூ. 2,400 உயர்ந்தது.
 
இதன்மூலம், ஒரு கிராம் தங்கம் ரூ. 11,900 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ. 95,200 ஆகவும் விற்பனையாகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 5,560 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
தங்கத்தின் விலையைப் போலவே, வெள்ளியின் விலையும் ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 183-க்கு விற்பனையாகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments