Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெற்பயிரில் படைப்புழு - அதிகாரி யோசனை

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (09:54 IST)
ராமநாதபுரம ் : ராமநாதபுரம் மாவட்டத்தில ், நெற்பயிரில் படைப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிக்குமாற ு, மண்டபம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆர். அரிவாசன் கூறியுள்ளார்.

கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையினாலும ், அதற்கு முன்பு நிலவிய கடுமையான வெயிலின் காரணமாகவும ், நெல் பயிரில் படைப்புழுவின் தாக்குதல் மண்டபம் வட்டாரத்தில் பல இடங்களில் பரவலாகக் காணப்படுகிறது.

வறட்சியான காலநிலைக்குப் பின்னர் பெய்த மழையின் காரணமா க, படைப்புழுக்கள் பட ை, படையாகத் தோன்றி இளம் நெல் பயிரினை அழித்து வருகின்றன.

இப் புழுக்களின் சேதம் இரவு வேளைகளில் அதிகமாக காணப்படும். இளம் பயிரினை கத்தரித்து தின்பதால ், ஆட ு, மாடுகள் மேய்ந்தது போல் காணப்படும்.

இப் புழுவின் தாய் அந்துப் பூச்சியானது பெரிதாகவும ், பழுப்பு நிறமுடையதாகவும் இருக்கும். முன் இறக்கைகளின் நடுவில் முக்கோண வடிவம் கொண்ட கரும்புள்ளிகள் காணப்படும். இப் பூச்சிகளின் வட்ட வடிவமான முட்டைக் குவியல்கள் நெல் தோகைகளில் அதிகமாகக் காணப்படும்.

இம் முட்டைகளில் இருந்து வெளிவரும் உருண்டை வடிவமான புழுக்கள் பச்சை நிறத்துடனும ், உடலின் மேல் பகுதியில் இரு புறங்களிலும் மங்கிய கோடுகளுடனும் காணப்படும். இப் புழுக்களே பயிரினை சேதப்படுத்துகின்றன.

இதனைக் கட்டுப்படுத்தி ட, ஒரு ஏக்கருக்கு மானோகுரோட்டோபாஸ் அல்லது என்டோசல்பான் மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்த ு, கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரங்களில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மேலும ், விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகிடுமாறும் ஆர். அரிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments