Publish Date: Fri, 06 Mar 2026 (15:35 IST)
Updated Date: Fri, 06 Mar 2026 (15:38 IST)
ஈரான் அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அந்நாட்டின் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கடந்த சில நாட்களாகவே தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் கோபமடைந்த ஈரான் அரசு சவுதி அரேபியா, துபாய், அபுதாபி, குவைத், லெபனான் போன்ற வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்திருக்கும் இடத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஈரான் கச்சா எண்ணெய் வழங்கி வருகிறது. அதேபோல் வளைகுடா நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய் பெறப்படுகிறது.. ஆனால் தற்போது ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் வாங்குவது பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயரும் என செய்திகள் வெளியாந்து. மேலும், கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் சிலர் பீதியை கிளப்பினார்கள்.
பல வருடங்களாகவே இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. ஆனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிய காரணத்தால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்தார். அதன்பின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது போர் காரணமாக கச்சா எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 30 நாட்களுக்கு நீக்கியிருக்கிறது அமெரிக்கா.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் நமக்கு எரிபொருள் வாங்க இன்னொரு நாட்டின் அனுமதியே ஏன் தேவை இந்தியாவில் நீண்ட கால சுதந்திரமான வெளியுறவு கொள்கையில் ஒன்றிய அரசு முற்றிலும் சமரசம் செய்ததாக தெரிகிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
Mahendran
Publish Date: Fri, 06 Mar 2026 (15:35 IST)
Updated Date: Fri, 06 Mar 2026 (15:38 IST)