Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் ஒரு அரசியல் ஆபத்து!.. இவர் முதல்வர் ஆனா நாடு நாசம்தான்!..

Advertiesment
tvk vijay
விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது ‘அதனால் என்ன?..வரட்டும்.. அரசியலில் மாற்றங்கள் வர வேண்டும்.. பல வருடங்களாக இரண்டு கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்யும் போது புதிதாக ஒருவர் வந்தால் நல்லதுதானே’ என பலரும் நினைத்து ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் தற்போது அவர்களின் ரசிகர்களும், ரசிகைகளும் பேசுவதையும், நடந்துகொள்வதையும் பார்க்கும்போது விபரீதமாக இருக்கிறது..

மதியம் 12:30 மணிக்கு கரூருக்கு வருவதாக சொல்லிவிட்டு இரவு 7 மணிக்கு போனார் விஜய். செல்லும் வழியில் தன்னைக் காண சாலையெங்கும் ரசிகர்கள் நிற்பதை பார்த்து ரசித்துக்கொண்டே வந்தார் விஜய். அதோடு, விளக்கை அணைத்து அணைத்து போட்டு விளையாடினார். கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து கொண்டிருந்தபோது சென்னை கிளம்பி போய்விட்டார்..ஒருபக்கம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களே ‘விஜயின் தவறு எதுவுமில்லை. போலீசார்தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.. இதற்குப் பின்னால் சதி இருக்கிறது’ என்று பேசினார்கள். எனவே விஜய்க்கு எந்த குற்ற உணர்ச்சியும் வரவில்லை..

அது கூட பரவாயில்லை!.. தன்னை பார்க்க வந்த 41 பேர் இறந்து மூன்று நாட்கள் கழித்துதான் ஒரு வீடியோ போட்டார் விஜய்.. அதிலும் கூட கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் முதல்வர் ஸ்டாலினை பற்றி பேசினார்.. அந்த சம்பவம் நடந்து இத்தனை மாதங்களாகியும் இப்போது வரை அது பற்றிய வருத்தமோ, மன்னிப்பையோ விஜய் பொதுவெளியில் கேட்கவில்லை..

webdunia


எனக்கு எல்லாம் தெரியும்.. எல்லாவற்றையும் பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறேன் என சொல்லுகிறார் விஜய்.. ஆனால் உண்மையில் அவருக்கு எந்த அரசியல் அறிவும் இருப்பது போல தெரியவில்லை.. சினிமாவில் வசனகர்த்தா அல்லது இயக்குனர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை எப்படி பேசுவாரோ அதுபோலவே ஆதவ் அர்ஜுனாவும், அருண்குமாரும் எழுதிக் கொடுப்பதை தவெக பொதுக்கூட்டங்களில் ஆவேசமாக பேசி வருகிறார் விஜய்..

அதுவும் ‘என்னை திட்டினால் மக்களை திட்டுவது போல’ என்கிறார்.. இதுவரை தமிழக அரசியல் எந்த ஒரு அரசியல் தலைவரும் இப்படி சொன்னதில்லை.. அவர் மீதான விமர்சனங்களுக்கு அவர்தான் பொறுப்பு.. அவர்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.. அதை விட்டுவிட்டு தன் மீது வரும் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் மக்கள் மீது திருப்பி விடுகிறார் விஜய்.. இவரா தலைவர்?. இவரா தூயசக்தி?.. இவரா நாட்டை காப்பாற்றப் போகிறார்?.. கரூரில் மக்கள் இறந்தபோது அங்கே நிற்காமல் வீட்டுக்கு ஓடிப்போனவரை எப்படி நம்புவது?...

ஒருபக்கம் விஜயின் ரசிகர்கள் என்கிற பெயரில் இருக்கும் ஜோம்பிகளை மாற்றுவதற்கு விஜய் ஏதாவது முயற்சி டுத்தாரா என்றால் இல்லை.. இப்போது வரை அவர்களுக்கு எந்த அறிவுரையையும் அவர் சொல்வதில்லை. என் வாகனத்தின் பின்னால் வராதீர்கள் என்று வேலூரில் மட்டும் ஒருமுறை சொன்னார் அவ்வளவுதான்.. சமீபத்தில் அவர் தஞ்சாவூர் வந்தபோதும் கூட அவர் வாகனத்தை சுற்றி விஜய் ரசிகர்கள் பைக்கில் வந்தார்கள்.. அப்போது விபத்தில் சிக்கி ஒரு கல்லூரி மாணவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு விஜய் வேண்டாம்.. தவெக நிர்வாகிகள் கூட எந்த உதவியும் செய்யவில்லை.. நேரில் சென்று விசாரிக்கவில்லை. அதன் பின்னராவது ‘இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்’ என விஜய்யிடம் இருந்து எந்த அறிக்கை கூட வெளிவரவில்லை..

webdunia


கரூர் சம்பவம் குறித்தோ, ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாதது  பற்றியோ, சிபிஐ தன்னைக் கூப்பிட்டு இரண்டு நாட்கள் விசாரித்தது பற்றியோ,  கூட்டணி பேச்சு வார்த்தை குறித்து விஜய் எங்கேயும், எப்போதும், எதுவும் பேசுவதில்லை.. அமைதியாக இருந்தால் அது எப்படி அரசியல்?.. பேசினால்தானே அது அரசியல்?.. கேட்டால் ‘நசநசனு பேசிக்கிட்டே இருக்கிறார்கள்’ என்கிறார்.. அவருக்கு எதிராக பேசினால் தவறு என்றால், எதையும் பேசாமல் இருப்பதும் கூட தவறுதானே.. விஜய் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.. முடியாது என்றால் என் பொதுவாழ்க்கைக்கு வருகிறார்?..

‘விஜயே பனையூரை விட்டு வெளியே வா’ என்கிறார்கள்.. கொஞ்சம் பொறுங்க பாஸ்.. எலக்சன் வரும்போது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் விஜய் வெளியே வருவார்’ என்கிறார்.. மொத்தத்தில் விஜய் வெளியே வர மாட்டார் அப்படித்தானே.. எல்லார் வீட்டிலும் விஜய் இருக்கிறார் என்கிறார்.. அது எந்த நம்பிக்கையில் சொல்கிறார்?.ஒருபக்கம், தவெக தொண்டர்களும், அவரின் விர்ச்சுவல் வாரியர்ஸ்களும் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.. பொதுவெளியிலும், சமூக வலைதளங்களும் மற்றவர்களை மிகவும் அசிங்கமாக விமர்சிக்கிறார்கள்.. விஜய் அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. மாறாக அதை ரசித்து வருகிறார்.

விஜயின் மனைவி சங்கீதா விஜய் ஒரு நடிகையுடன் குடும்பம் நடத்துகிறார் என நீதிமன்றத்தை அணுகியபோது அவரை மோசமான வார்த்தைகளால் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.. விஜய் நினைத்திருந்தால் ஒரு அறிக்கை வெளியிட்டு அதை தடுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.. ‘திட்டட்டும்’ என்று வேடிக்கை பார்த்தார்.. இதுதான் விஜயின் குரூர புத்தி. திமுகவை திட்டுவதை தவிர வேறு எந்த அரசியலும் விஜய்க்கு தெரியவில்லை.. அரசியலில் எந்த கொள்கையும் இல்லை..

தன்னால் இறப்புகள் ஏற்பட்டால், பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்பவன்தான் தலைவன். ஆனால் விஜய் அதை மக்கள் பக்கம் திருப்பி விடுகிறார்.. சமீபத்தில் கூட ‘கரூர் விஷயத்தில் என் மீது ஏன் சார் பழி போட்டீங்க?’ என முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பினார். அப்படி என்றால் கரூர் சம்பவத்திற்கும், விஜய்க்கும் சம்பந்தமே இல்லையா?.. காலை முதல் இரவு 7 மணி வரை இவருக்காக பல ஆயிரம் பேர் தண்ணீர், உணவு வசதி இல்லாமல் நின்று கொண்டிருந்தார்களே!.. போலீசாராலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டடம் கூடினால் நெரிசல் ஏற்படத்தான் செய்யும்.. இது நம்மால்தான் என்பது ஏன் விஜய்க்கு இப்போது வரை புரியவில்லை?.. இன்னும் ஏன் திமுகவை திட்டிக் கொண்டிருக்கிறார்?..

webdunia


தனது தவறுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள முடியாதவன் என்ன தலைவன்?.. என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் இந்த கேள்விக்கெல்லாம் விஜய் பதில் சொல்ல மாட்டார்.. இதுவரை செய்தியாளர்களை சந்தித்து பேசியதில்லை.. ஏனெனில் தைரியம் இல்லை.. காரணம் அங்கு எழுதிக் கொடுப்பதை மட்டும் பேச முடியாது. மனைவி விவாகரத்து கோரியிருக்கும் நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் திரிஷாவுடன் திருமணத்திற்கு போயிருக்கிறார் விஜய்.. இதுதான் விஜயின் குணம்..

தவெகவினர் செய்யும் அலப்பறைகளை பார்த்தால் இவர்களுக்கு தற்போது உள்ள திராவிட கட்சிகளே பரவாயில்லை என்கிற எண்ணம் வருகிறது. இவர்களெல்லாம் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களாக மாறி, விஜய் முதல்வராக மாறினால் நாடு தாங்குமா என்பது தெரியவில்லை..

முடிவு மக்கள் கையில்!..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கலாம்!.. தடையை நீக்கிய அமெரிக்கா!..