Publish Date: Fri, 06 Mar 2026 (17:19 IST)
Updated Date: Fri, 06 Mar 2026 (17:22 IST)
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த அனைத்து கட்சிகளும் இந்த முறையும் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. புதிதாக கமலின் மக்கள் நீதி மய்யம், தேமுதிக மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள்.ஓ.பிஎஸ்-ஐ பொறுத்தவரை இரண்டு சீட்டுகள் மட்டும்தான் கேட்டிருக்கிறார்.. எனவே அது பெரிய பிரச்சனை இல்லை..
அதேநேரம் அதிக தொகுதிகள் வாங்குவதில் திமுகவுக்கும், விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. தேமுதிகவுக்கு ஏற்கனவே ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டுவிட்டது.. அதோடு அந்த கட்சிக்கு 10 தொகுதிகள் வரை கொடுக்கவிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது..
அதேநேரம் விடுதலைச் சிறுத்தைக்கு 8 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்திருக்கிறது.. இதனால் தொல். திருமாவளவனும், விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்திருக்கிறார்களாம். தேமுதிகவை விட அதிகமாக வாக்கு வங்கி வைத்திருக்கும் எங்களுக்கு 8 சட்டமன்ற தொகுதிகள்.. ஆனால் எங்களை விட மிகவும் குறைவான வாக்கு வாங்கி வைத்திருக்கும் தேமுதிகவுக்கு 10 சட்டமன்றத் தொகுதிள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதா? என விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் கோபப்பட துவங்கியிருக்கிறார்களாம்.
மேலும், 8 தொகுதிளை கொடுத்தால் வாங்காதீர்கள் என அக்கட்சியின் நிர்வாகிகள் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.