Publish Date: Fri, 06 Mar 2026 (18:47 IST)
Updated Date: Fri, 06 Mar 2026 (18:52 IST)
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய போது திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வருவார் என பலரும் எதிர்பார்த்தார்கள்.. ஏற்கனவே இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக அரசியல் கட்சியை துவங்கிய சீமானும் விஜய் நம்முடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்த்தார்.. ஆனால் விஜய் திராவிடத்தை தூக்கிப் பிடித்ததால் சீமான் கோபம் அடைந்து விஜயை கடுமையாக விமர்சிக்க துவங்கினார்..
ஆனால் விஜய் எந்த ரியாக்ஷனும் கட்டவில்லை.. அவர் தொடர்ந்து திமுகவை மட்டுமே குறி வைத்து பேசுகிறார். விஜயையும், அவரின் ரசிகர்களையும் தொடர்ந்து திட்டிவந்த சீமான், தவெகவிலிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை என்பதால் ஒருகட்டத்தில் அதை நிறுத்திக்கொண்டார்.அதேநேரம் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் சாட்டை திருமுருகன் போன்றவர்கள் விஜயின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தும், நக்கலடித்தும் தொடர்ந்து youtube-களில் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்..
ஒருபக்கம் விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றார்.. மேலும் விஜய்க்கு நடிகையுடன் தொடர்பிருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த விவகாரம் பரபரப்பாக மக்களிடம் பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு விஜய் திரிஷாவை அழைத்துக் கொண்டு சென்றார். இது பலருக்கும் அதிருப்தியை கொடுத்திருக்கிறது..
இந்நிலையில், இது தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு பேசுவதற்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறது.. அதை பற்றி கேளுங்கள் என கூறினார்.