Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமிக்கு சலுகை காட்டாத நடிகர் சங்கம்!

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2008 (20:00 IST)
சாமியின் 'சரித்திரம்' படத்திலிருந்து விலகியிருக்கிறார் மீனாட்சி. சாமி மீதுள்ள ஓராண்டு தடையை நடிகர் சங்கம் விலக்கிக் கொள்ளாததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

சாமி, பத்மப்ரியாவை அறைந்த விவகாரத்தில் அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. சாமி கேட்டுக் கொண்டதால் ஓராண்டுக்கு முன்பே தடையை விலக்கிக்கொண்டது தயாரிப்பாளர்கள் சங்கம்.

ஆனால், சாமி மீதான நடிகர் சங்கம் தடை அக்டோபர் மாதம் வரை உள்ளது. அதுவரை சாமிக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என தனது உறுப்பினர்களுக்கு கறார் உத்தரவு பிறப்பித்ததாக கூறுகிறார்கள்.

அதுவரை சாமிக்காக காத்திருக்க முடியாது என்பதால் சரித்திரத்துக்கு கொடுத்த கால்ஷீட்டை லட்சுமிகாந்தனின் தநா-07 அல 4777 படத்துக்கு கொடுத்துள்ளார் மீனாட்சி.

இந்த திடீர் திருப்பத்தால் வேறு கதாநாயகி தேடி வருகிறார் சாமி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments