Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவை மாற்றிக் கொண்டாரா மிஷ்கின்!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (20:27 IST)
மிஷ்கினின் அடுத்தப் படம் எது?

மிஷ்கினை விட ரசிகர்கள் அதிக ஆவலாக இருக்கிறார்கள். அஞ்சாதே படத்துக்குப் பிறகு விஷால் நடிக்கும் படத்தை இயக்குவதாக மிஷ்கின் கூறினார். விஷாலும் இதனை உறுதி செய்தார். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா படத்தை தயாரிப்பதாக ஏற்பாடு. சூப்பர் ஹீரோ கதை, பிரமாண்ட பட்ஜெட் என மிஷ்கின் - விஷால் இணையும் படம் பரபரப்பாகப் பேசப்பட்டது!

இந்நிலையில், கோயம்புத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், நடிகர்களுக்கு கதை எழுதுவதை விரும்பவில்லை என்றும், கைவிடப்பட்ட நந்தலாலா படத்தை மீண்டும் இயக்குவேன் என்றும் கூறினார்.

இதையடுத்த சில நாட்களில் நடிகர் சூர்யாவை சந்தித்து கதை சொன்னார் மிஷ்கின். அது, கைவிடப்பட்ட நந்தலாலா கதை என்பது பலமான நம்பிக்கை.

ஏ.எம். ரத்னத்தின் ஸ்ரீ சூர்யா மூவிஸ் நந்தலாலா படத்தை சித்திரம் பேசுதடி படத்துக்குப் பின் தயாரிக்க முன்வந்தது. ஹீரோ ரவிகிருஷ்ணா. ஹீரோயின் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஸ்னிக்தா. பல காரணங்களால் நந்தலாலா போட்டோசெஷனுடன் கைவிடப்பட்டது. அஞ்சாதேயில் கத்தாழ கண்ணால பாடலுக்கு ஆடியவர், நந்தலாலாவில் நடிக்க வந்த ஸ்னிக்தாதான்.

நந்தலாலா மீது மிஷ்கினுக்கு இருக்கும் பிரேமையை அறிந்தவர்கள், அவரின் அடுத்தப் படம் நந்தலாலா என்று அடித்துக் கூறுகிறார்கள்.

மிஷ்கின்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments