அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புதிய H-1B விசா கொள்கை குறித்து நிதி செயலர் ஸ்காட் பெசென்ட் விளக்கமளித்துள்ளார். இந்த கொள்கை நிரந்தர வெளிநாட்டு சார்பை குறைத்து, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டு வந்து, அமெரிக்க பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டது என்று அவர் தெரிவித்தார்.
"செமிகண்டக்டர் மற்றும் கப்பல் கட்டும் போன்ற துறைகளில் அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, வெளிநாட்டு தொழிலாளர்கள் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை தங்கி பயிற்சி அளிப்பார்கள். அதன் பிறகு அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றுவிடலாம். பின்னர், அமெரிக்கத் தொழிலாளர்கள் அந்த பணிகளை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள்," என்று அவர் விளக்கினார்.
மேலும், ஆண்டுக்கு $100,000 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு சாத்தியமான $2,000 டாலர் வரியில் சலுகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.