அமெரிக்க நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டிற்கான அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, விமான போக்குவரத்துத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி முடக்கம் காரணமாக போக்குவரத்து துறையில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரசின் நிதி முடக்கத்தால், விமான போக்குவரத்து துறையின் பல ஊழியர்களுக்கு ஊதியமில்லா கட்டாய விடுப்பு வழங்கப்பட்டது. அத்தியாவசிய துறைகளில் பணிபுரியும் சுமார் 7 லட்சம் பேர் ஊதியமின்றி வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சுமார் 13,000 போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 50,000 பாதுகாப்பு சோதனை ஊழியர்கள் ஊதியமின்றிப் பணியாற்றுகின்றனர். கட்டளையிடப்பட்ட ஊழியர்களில் பலர் விடுப்பு எடுப்பதால், பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை குறைத்ததால், அட்லாண்டா, டென்வர், சிகாகோ உட்பட 12 முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்து மோசமாக பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலை தொடர்ந்தால், விமான போக்குவரத்தில் மேலும் 6% முதல் 10% வரை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.