அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
நவம்பர் 1-ஆம் தேதி முதல் சீன இறக்குமதிகளுக்கு ஏற்கனவே உள்ள 30% வரியுடன் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும். மொத்தமாக சீனப் பொருட்களின் மீது 130% வரி விதிக்கப்பட உள்ளது.
சீனா வர்த்தகத்தில் "அசாதாரணமான ஆக்ரோஷமான நிலைப்பாட்டை" எடுத்துள்ளதாகவும், அது உலக நாடுகளுக்கு விரோதமான கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது சர்வதேச வர்த்தகத்தில் கேள்விப்படாத, தார்மீக அவமானம் என்று அவர் கடுமையாகச் சாடினார்.
சீனாவின் நிலைப்பாட்டை காரணம் காட்டி, ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருந்த திட்டத்தை டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா "வலுவான எதிர் நடவடிக்கைகளை" எடுக்க தயாராவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.