அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலையால், சாமானிய மக்கள் நகை வாங்குவது என்பது சவாலான விஷயமாக மாறியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக, காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை உயர்ந்து உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில், நேற்று காலை சற்று அதிரடியாக குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ந்தனர். இருப்பினும், நேற்று மாலை மீண்டும் விலை உயர்ந்து, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,720க்கு விற்பனையானது.
இதையடுத்து, இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 காரட் தங்கம்: கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை: கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187க்கும், ஒரு கிலோ ரூ.1,87,000க்கும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த தொடர் விலை உயர்வு, வரவிருக்கும் பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.