கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் நிலவிய பதற்றம் தற்போது கிட்டத்தட்ட போராகவே தொடங்கிவிட்டதாகக்கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள தாலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க இராணுவம் உதவியுள்ளதாக கூறப்படும் நிலையில், காபுலில் இரண்டு சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததாகவும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கும் தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்த சூழலில், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்தது பாகிஸ்தானுக்கு மேலும் கோபத்தை அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே பல போர்களை நிறுத்தியதாக கூறி வரும் டிரம்ப், இந்த போரையும் நிறுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.