சமீபத்தில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்காதது பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனம் திறந்துள்ளார்.
பல நாட்டு போர்களை நிறுத்தியதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்கும் என ட்ரம்ப் ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில், வெனிசுலா பெண் சமூக செயல்பாட்டாளர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்பட்டது.
இதுகுறித்து முதன்முறையாக மனம் திறந்த அதிபர் ட்ரம்ப் “நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் மரியா என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது உங்களுக்கு நோபல் பரிசை அர்ப்பணிக்கிறேன், நீங்கள்தான் இதற்கு தகுதியானவர் என கூறினார். எனினும் நான் நோபல் பரிசு தாருங்கள் என கேட்கவில்லை. மரியா நோபல் பெறுவது சரியான விஷயம்.
ஏனென்றால் அவருடைய போராட்டத்தில் நானும் உதவி செய்து வருகிறேன். லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியதே மகிழ்ச்சியாக உள்ளது. அந்த மனநிலையே போதுமானது” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K