அமைதிக்கான நோபல் கிடைக்காதா என தீவிரமாய் போராடிய ட்ரம்ப், இன்றைய அறிவிப்பால் ஏமாற்றமடைந்தாலும் ஒரு வகையில் மகிழ்ச்சியும் அடைவதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் 8 போர்களை நிறுத்தி சமாதானம் செய்துள்ளேன், எனக்கு உலக அமைதிக்கான நோபல் கொடுங்கள் என மன்றாடாத குறையாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வேண்டி வந்தார். ஆனால் இன்று ஸ்வீடிஸ் அகாடமி, வெனிசுலாவை சேர்ந்த அரசியல்வாதியும் சமூக செயற்பாட்டாளருமான மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado)வுக்கு உலக அமைதிக்கான நோபலை வழங்கியுள்ளது.
இது ட்ரம்புக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தாலும், ஒருவகையில் மச்சாடோவிற்கு வழங்கியதில் அவர் மகிழ்ச்சியும் அடைவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. தற்போது வெனிசுலா நாட்டின் எதிர்கட்சி தலைவராக உள்ள மச்சாடோ தொடர்ந்து தற்போதைய அதிபரான நிக்கோலஸ் மதுரோ (Nicholas Maduro)வின் சர்வாதிகாரத்தனமான ஆட்சியை விமர்சித்து மக்களிடையே ஜனநாயகம் பற்றி பேசி வருகிறார்.
மதுரோவை எதிர்க்கும் விஷயத்தில் ட்ரம்ப்பும், மச்சாடோவும் ஒன்றுபடுகிறார்கள். முன்னதாக வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்கு நடைபெறும் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் கும்பலோடு மதுரோவிற்கு உள்ள தொடர்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மச்சாடோவிற்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசு ஒருவகையில் வெனிசுலா அதிபருக்கு எதிரானதும் கூட என்பதால் ட்ரம்ப் தரப்பு சமாதானமடைந்துக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K