வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு, ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதற்காக நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத் ராகுல் காந்தியும் நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்ற கருத்தை அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் ஆளும் அரசின் 'சர்வாதிகாரத்திற்கு' எதிராக ராகுல் காந்தி போரிடுவதாக காங்கிரஸ் நீண்ட காலமாக கூறி வருகிறது. 'வாக்குத் திருட்டு,' வாக்காளர் நீக்கம், இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பது போன்ற பல பிரச்சினைகளை ராகுல் காந்தி தொடர்ந்து எழுப்பி வருகிறார்.
வேலையின்மை, பொருளாதார பின்னடைவு, சிறுபான்மையினர் உரிமைகள் சமரசம், மாற்றுக் கருத்து நசுக்கப்படுவது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கப் போராடி வருகிறது.
மச்சாடோவுக்கு நோபல் கிடைத்த இந்த சூழல், ராகுல் காந்தியின் போராட்டத்தை உலக அரங்கில் கவனத்திற்கு கொண்டுவர காங்கிரஸ் முனைவதை காட்டுகிறது.