ஆப்கன் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை தாக்கி பதிலடி கொடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தெக்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு பாகிஸ்தானுக்கு எதிரான செயல்பாடுகளை கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகிறது. இந்நிலையில் அந்த அமைப்பின் தலைவர் நூர் வாலியை குறிவைத்து, அவர் இருந்த ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூலின் கிழக்கு பகுதியில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியது. ஆனால் இதில் நூர் வாலி தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக களமிறங்கிய தாலிபான், பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள அவர்களது ராணுவ நிலைகளை தாக்கி அழித்துள்ளது. இந்த தாக்குதலில் 12 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலியானதாக கூறப்படுகிறது. இரு நாடுகள் இடையே எழுந்துள்ள இந்த மோதல் போராக வெடிக்கலாம் என கருதப்படும் நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K