இன்று அதிகாலை ஒரு மணிக்கு, இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர் " என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களில் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் மூன்று அப்பாவி இந்திய பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலை கண்மூடித்தனமாக நடத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு இந்திய ராணுவம் சரியான முறையில் பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா ஒரு பக்கம் ராணுவ முகாம்களை மட்டும் அழித்து, பாகிஸ்தான் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய அப்பாவி பொதுமக்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.