இந்திய பொருட்களுக்கு 50% சுங்க வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை அமெரிக்க ஜனநாயக கட்சி கண்டனம் செய்துள்ளது. உண்மையில் இந்த வரி சீனாவின் மீதுதான் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் டிரம்ப் இந்தியாவுக்கு வரி விதித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை டிரம்ப் நாசம் செய்துவிட்டதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், இந்தியா மீது மட்டும் கவனம் செலுத்துவது நியாயமற்றது என்றும், உண்மையில் சீனா மீதே 50% வரி விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், சீனா மீது வரி விதிக்காமல் இந்தியாவுக்கு வரி விதித்திருப்பது டிரம்ப் செய்த மிகப் பெரிய தவறு என்றும், இது இரு நாடுகளின் உறவை நாசம் செய்துவிட்டது என்றும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற வெளியுறவு குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
டிரம்பின் இந்த பொருளாதார முடிவுகள், உள்நாட்டு அரசியல் அரங்கில் அவருக்கு எதிராக ஒருமித்த கருத்தை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவின் வர்த்தக நலன்களுக்கு பதிலாக, தனிப்பட்ட அரசியல் மோதல்களின் அடிப்படையில் முடிவெடுப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கண்டனம், டிரம்ப்பின் கொள்கைகள் அவரது சொந்த கட்சிக்குள் மட்டுமின்றி எதிர்க்கட்சியின் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.