Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணு ஆயுத போரா மாறியிருக்கும்.. நான் மிரட்டியதால் நிறுத்துனாங்க! - இந்தியா குறித்து மீண்டும் ட்ரம்ப் சர்ச்சை பேச்சு!

Advertiesment
India Pakistan war

Prasanth K

, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (11:04 IST)

தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என உலகம் முழுக்க தம்பட்டம் அடித்து வரும் ட்ரம்ப் மீண்டும் ஒரு முறை அதையே பேசியுள்ளார்.

 

இந்தியா - பாகிஸ்தான் போருக்கு பிறகு பலமுறை அந்த போரை நிறுத்தியது நான் தான் என எல்லா பக்கமும் விளம்பரம் தேடி வருகிறார் ட்ரம்ப். அந்த போருக்கு பிறகு இந்தியாவிற்கு அதிகமான வரிகளை விதித்துள்ளதுடன், பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறார் ட்ரம்ப். ஏற்கனவே இந்தியாவிற்கு 25 சதவீதம் வரிவிதித்த நிலையில் நாளை முதல் அதை மேலும் 25 சதவீதம் உயர்த்துகிறார்.

 

இதற்கிடையே மீண்டும் ஒருமுறை தனது போர்நிறுத்த சாதனை குறித்து பேசிய ட்ரம்ப் “நான் அவர்களிடம் வர்த்தகம் செய்யப் போகிறீர்களா? நீங்கள் போரிட்டுக் கொண்டே இருந்தால் நனக்கள் எந்த வர்த்தகமும் செய்ய மாட்டோம் மற்றும் 100 சதவீதம் வரியை விதிப்போம் என்று சொன்னேன். அதனால் அவர்கள் போரை கைவிட்டார்கள்.

 

இல்லையென்றால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் அணு ஆயுத போராக மாறியிருக்கக் கூடும், இரு நாடுகளும் 7 போர் விமாங்களை சுட்டு வீழ்த்தின. 24 மணி நேரத்திற்கு சண்டையை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் நிறுத்தப்படும் என நான் எச்சரித்ததால் போர் நின்றது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்காவுக்கு அடிமையான பெண்! பணம் தர மறுத்த கணவர்! - குழந்தைகளை கொன்று தற்கொலை!