Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தோனேசியாவில் உயிரிழந்த ஆஸ்திரேலியரின் உடலில் இதயத்தை காணவில்லை.. திருடப்பட்டதா?

Advertiesment
ஆஸ்திரேலியா

Siva

, புதன், 24 செப்டம்பர் 2025 (09:05 IST)
இந்தோனேசியாவில் உயிரிழந்த ஆஸ்திரேலியரின் உடல், அவரது இதயம் இல்லாமல் நாடு திரும்பியதால், ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்தோனேசிய அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
 
பைரன் ஹாடோ என்ற ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் இந்தோனேசியாவின் பாலி தீவில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. ஹாடோவின் குடும்பத்தினர் நடத்திய இரண்டாவது பிரேத பரிசோதனையின்போது, அவரது உடலில் இதயம் இல்லை என்பது தெரியவந்தது. உடல் திருப்பி அனுப்பப்பட்டு பல வாரங்கள் கழித்தே இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இதயத்தை அகற்றியது குறித்து, தங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், தங்கள் சம்மதமும் பெறப்படவில்லை என்றும் ஹாடோவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகள், பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. 
 
பைரன் ஹாடோவின் உடல் இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டபோது, ஆஸ்திரேலிய அதிகாரிகள் முறையாக பிரேதப் பரிசோதனை மற்றும் உடலைச் சரிபார்க்கும் நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
 
இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய அரசு தீவிரமாக விசாரித்து வருகிறது. ஹாடோவின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், இந்தோனேசிய அரசாங்கத்திடம் உறுதியான பதிலை எதிர்பார்க்கிறது. 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூட்டிய வீடுகளில் நடக்கும் தொடர் கொள்ளை.. பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!