Publish Date: Wed, 24 Sep 2025 (08:22 IST)
Updated Date: Wed, 24 Sep 2025 (08:23 IST)
கிரிக்கெட்டில் மிக நீண்டகால வரலாறு உள்ள தொடர்களில் ஒன்று ஆஷஸ். 140 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருமுறை இங்கிலாந்திலும் மற்றொரு முறை ஆஸ்திரேலியாவிலும் இந்த தொடர் நடக்கிறது.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நவம்பர் 21 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை நீண்ட தொடராக நடக்கவுள்ளது. இதற்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போதே அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி
ஸாக் கிராலி, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் டக்கட், ஹாரி ப்ரூக்( துணைக் கேப்டன்), ஓலி போப், ஜேமி ஸ்மித், ப்ரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்ஸன், சோயப் பஷீர், மேத்யூ பாட்ஸ், மார்க் வுட், ஜோஷ் டங், வில் ஜாக்ஸ்