சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் லுக் தற்போது வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தில் உலகத்தரம் வாய்ந்த விஎஃப்எக்ஸ் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கின்றது. அதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பராசக்தி. அந்தப் படம் பொங்கல் ரிலீஸாக வெளியாக இருக்கின்றது. ஏற்கனவே பொங்கல் ரிலீஸாக விஜயின் ஜன நாயகன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியாக இருக்கின்றது.
அதனால் இந்த வருட பொங்கல் மாஸ் பொங்கலாக ரசிகர்களுக்கு இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு இணையாக சிவகார்த்திகேயனை உருவாக்க சில சதிகளும் கோடம்பாக்கத்தில் நடந்து வருகின்றன. அரசியலிலும் விஜயை வீழ்த்த பல்வேறு சதிகள் எழுந்து வருகின்றன. இப்போது சினிமாவிலும் சிவகார்த்திகேயனை விஜய்க்கு இணையாக கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றன.
மேலும் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியையும் கமலையும் வரவைக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயனும் வெங்கட் பிரவும் நேற்று துபாய் விமான நிலையத்தில் இருக்கும் மாதிரியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அங்கிருந்து அவர்கள் இருவரும் அமெரிக்கா செல்கிறார்கள். அடுத்தப் படத்திற்கான வேலையில் இருவரும் இறங்கி விட்டார்கள்.
சிவகார்த்திகேயனின் உருவத்தை லோலா விஎஃப்எக்ஸ் தொழில் நுட்பம் மூலமாக எடுத்து படத்தில் பயன்படுத்த இருக்கிறார்களாம். அதற்காகத்தான் சிவகார்த்திகேயனும் வெங்கட் பிரவும் அமெரிக்கா சென்றிருப்பதாக கூறப்படுகிறது.