Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

Advertiesment
பிரேம்ஜி அமரன்

Mahendran

, புதன், 19 நவம்பர் 2025 (16:17 IST)
நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
திரையுலகில் நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டவர் பிரேம்ஜி அமரன். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான இவர், கடைசியாக விஜய்யின் 'தி கோட்' திரைப்படத்திலும், இயக்குநர் கருப்பையா முருகன் இயக்கித் தயாரித்த 'வல்லமை' திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
 
இந்த நிலையில், பிரேம்ஜிக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதாக, 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா உறுதிப்படுத்தியுள்ளார்.
 
47 வயதில் தந்தையாகி இருக்கும் பிரேம்ஜிக்கு, திரையுலகை சேர்ந்த நண்பர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்