தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது அவருடைய நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பராசக்தி. அமரன் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. அதுமட்டுமல்ல ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தன்னை அந்த படத்தின் மூலம் நிலைநிறுத்திக் கொண்டார்.
அந்தப் படம் அவருக்கு ஒரு பெரிய அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது. அதிலிருந்து அஜித் விஜய் அளவுக்கு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டார் சிவகார்த்திகேயன். அமரன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் கமிட்டானார். குறிப்பாக தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனர்களுடன் சேர்ந்து படம் பண்ண ஆரம்பித்தார்.
தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த படம் தயாராகி வருகின்றது. அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் அந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி அவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போயிருந்தது.
அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திலும் ஸ்ரீ லீலா நடிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பராசக்தி திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தில் தான் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்போது கோலிவுட்டில் அதிகம் பேசப்படும் நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். அதுவும் விஜய் அரசியலுக்கு போன பிறகு அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என பேசி வருகிறார்கள். அதற்கேற்ப கதைகளையும் இயக்குனர்களையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன்.