நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான பிரபாஸின் 'கல்கி 2898 AD' திரைப்படம், மகாபாரதம் மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்த கற்பனை கதைக்காக பாராட்டுகளைப் பெற்றது. சுமார் 1000 கோடி ரூபாய் வரை வசூலித்த இப்படம், வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன் ஆகியோருடன் நடிகை தீபிகா படுகோனே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, 'கல்கி - 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் பாகத்தில் கலந்துகொள்ள தீபிகா படுகோன் சில நிபந்தனைகளை விதித்ததன் காரணமாக, அவரை தயாரிப்பு நிறுவனம் படத்திலிருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தீபிகா படுகோன் நடிக்கவிருந்த முக்கியமான கதாபாத்திரத்தில், நடிகை பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்யத் தயாரிப்பு குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், கல்கி 2898 AD தொடரின் அடுத்த பாகத்தில் பிரியங்கா சோப்ரா இணைவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.