தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய்சேதுபதி. ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிறகு வில்லனாக சுந்தரபாண்டியன் படத்தில் நடித்தார். சசிகுமாருக்கு வில்லனாக அந்தப் படத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தில் நடிக்கும் போது யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், விஜய்சேதுபதி பின்னாளில் இந்தளவு உயரத்தை அடைவாரா என்று?
ஆனால் இன்று தமிழ் மட்டுமில்ல தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் கலக்கி வருகிறார். அதுமட்டுமில்ல உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இவர்தான் தொகுத்து வழங்கிவருகிறார். இதனால் உலகளவில் விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள். விஜய்சேதுபதியை பொறுத்தவரைக்கும் அவருடைய திறமை ஒரு அசாத்திய திறமை.
ஹியூமர் அவர் முகத்தில் தாண்டவம் ஆடும். அதை விட வில்லன் கேரக்டரில் ருத்ர தாண்டவமே ஆடுவார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் விக்ரம் படத்தில் சந்தனம் கேரக்டரில் மிரட்டியிருப்பார். விஜய்சேதுபதியின் சமீபகால படங்களை விட ஆரம்ப கால படங்கள் இன்றளவும் ரசிக்கும் படியாக இருக்கின்றன. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் அவருடைய காமெடியே படத்திற்கு பெரிய அளவில் உறுதுணையாக அமைந்தன.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நியூஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடன இயக்குனர் சாண்டி நடிக்க போவதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சாண்டியும் கிட்டத்தட்ட விஜய்சேதுபதி மாதிரிதான் என்றும் கூறி வருகிறார்கள்.
வில்லன் கேரக்டருக்கு பிறகு சாண்டி நடிக்கும் காமெடியான ரோல் இந்தப் படத்திற்காகத்தான். அவருடைய ஹியூமரை ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 3ல் நாம் பார்த்திருக்கிறோம். சாண்டிக்காகவே அந்த சீசன் பெரியளவில் வெற்றியடைந்தது. அடுத்த விஜய்சேதுபதி சாண்டிதான் என்றும் சொல்லி வருகிறார்கள்.