தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் அஜித் படத்தில் தனக்கு ஏற்பட்ட வருத்தத்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நடிகை பகிர்ந்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. கேளடி கண்மணி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நீனாதான். கேளடி கண்மணிக்கு முன்பே அவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழ் மலையாளம் என பிற மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
படம் மட்டுமில்லாமல் அண்ணாமலை தொடரிலும் முக்கிய கேரக்டரில் நடித்தார். கேளடி கண்மணி படம்தான் இவரை ரசிகர்களிடம் எளிதாக கொண்டு சேர்த்த படம். இந்தப் படத்தில் இவருக்கு தேசிய விருது நிச்சயமாக கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். நாமினேசனிலும் தேர்வாகியிருக்கிறார். கடைசியில் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாமிலிக்கு கிடைத்திருக்கிறது.
கேளடி கண்மணி படம் தான் இயக்குனர் வசந்தின் முதல் படம். கேளடி கண்மணி படத்திற்கு ஒரு சில படங்களில் நடித்த நீனாவை அவரது பெற்றோர்கள் கொஞ்சம் ப்ரேக் எடுக்கலாம் என பிரேக் எடுக்க வைத்திருக்கின்றனர். அதன் பிறகு அவர் கம்பேக் கொடுத்த படம் அஜித் நடித்த ராசி திரைப்படம். அந்தப் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.
தங்கை கேரக்டர் என்று சொன்னதும் நீனாவின் பெற்றோர் முதலில் தயங்கியிருக்கிறார்கள். ஆனால் இயக்குனருக்காக அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் நீனா. நீனாவை வைத்து பல காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். அவருக்காக ராசி படத்தில் ஒரு பாடலையும் படமாக்கியிருக்கிறார்கள். படமுழுக்க வருகிற மாதிரிதான் நீனாவின் காட்சிகள் இடம்பெற்றதாம்.
ஆனால் படம் ரிலீஸான போது படத்தை பார்த்திருக்கிறார் நீனா. அந்தப் படத்தில் அவருடைய பல காட்சிகளை தூக்கியிருக்கின்றனர். ஏதோ வந்து போகிற மாதிரி அந்தப் படத்தில் காட்டிவிட்டார்கள் என்று சமீபத்தி ஒரு பேட்டியில் நீனா வருத்தப்பட்டு பேசியிருப்பார். அதற்கு முன்பு வரை நீனா நடித்த கேரக்டர் பார்த்தால் மிகவும் பேசப்பட்ட கேரக்டர்களாகவே இருந்திருக்கும். ராசி படத்தில்தான் இப்படி ஆகிப் போச்சு என மிகவும் ஃபீல் பண்ணி பேசினார்.