பிரபல நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு ஆகியோரின் திருமணம் டிசம்பர் 1 அன்று கோயம்புத்தூரில் உள்ள இஷா யோகா மையத்தில் நடைபெற்றது.
திருமணத்தை தொடர்ந்து, ராஜ் தனது முன்னாள் மனைவி ஷியாமலி தேயிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றாரா என்பது குறித்து சமூக ஊடகங்களில் யூகங்கள் பரவின. இந்த வதந்திகளுக்கு ஷியாமலி தே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் மூலம் பதிலளித்துள்ளார். அவருடைய பதிவு இதோ:
எனக்குக் கிடைத்த அனைத்து அன்புக்கும் நன்றி, நல்வாழ்த்துக்கள், பாசமான வார்த்தைகள், மற்றும் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன், புரண்டு படுத்தேன், விவாதித்தேன். எனக்கு வரும் அனைத்து நன்மைகளையும் நான் அங்கீகரிக்காமல் இருப்பது நன்றி கெட்டதாகவும், மோசமானதாகவும் இருக்கும் என்று உணர்ந்தேன்.
நான் பல ஆண்டுகளாக 'இரட்டை இதய தியானத்தை' பயிற்சி செய்து வருகிறேன். இந்த தியானம் தாய் பூமிக்கும், அனைத்து நபர்களுக்கும் அமைதி, அன்பு, மன்னிப்பு, நம்பிக்கை, ஒளி, மகிழ்ச்சி மற்றும் நல் எண்ணங்களைப் பரப்புவதை உள்ளடக்கியது."
எனக்கு எந்த குழுவும், பிஆர் குழுவும், பணியாளர்களும் அல்லது இணை நிர்வாகிகளும் இல்லை. எனது இன்ஸ்டா பக்கத்தை நானே முழுமையா கையாளுகிறேன்.. நானே தனிப்பட்ட முறையில் பதிலளித்து வருகிறேன்," என்று அவர் எழுதினார்.