சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் லிங்குசாமி இயக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க என கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியுடன் உருவாகி 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸானது அஞ்சான் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. திரைக்கதை என்ற வஸ்து இல்லாமல் எடுக்கப்பட்ட அஞ்சானை இணையத்திலும், பத்திரிகைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத அளவுக்கு அந்த படத்தின் மீதும், இயக்குனர் லிங்குசாமியின் மீதும் ட்ரோல்கள் எழுந்தன.
ஆனால் அஞ்சான் படத்தின் இந்தி டப்பிங் வெர்ஷன் யுடியூபில் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதையொட்டி மீண்டும் படத்தொகுப்பு செய்யப்பட்டு நாளை ரிலிஸாகவுள்ளது. இந்த ரி ரிலீஸுக்காக சுமார் 30 நிமிடக் காட்சிகளைப் படக்குழு நீக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் சூரி சம்மந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் மொத்தமும் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.