திரைப்பட இயக்குநர் ராஜ் நிடிமோரு மற்றும் நடிகை சமந்தா ரூத் பிரபுவின் திருமணம் டிசம்பர் 1 அன்று கோவையில் நடந்த நிலையில், ராஜின் முன்னாள் மனைவி ஷியாமலி தே தனது இன்ஸ்டாகிராமில் முதல் பதிவை பகிர்ந்துள்ளார்.
திருமணத்திற்கு முன் "மனம் தளராதவர்கள்" பற்றி ஒரு மறைமுக பதிவை வெளியிட்டிருந்த ஷியாமலி, தற்போது பிரபஞ்சத்தின் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், சிறிய புள்ளி (பூமி) மீது "நாம் இங்கு வாழ்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் பரந்த தன்மையுடன் ஒப்பிடுகையில் தனிப்பட்ட சவால்கள் சிறியவை என்ற குறியீடாக இது பார்க்கப்படுகிறது. பின்னணியில் 'சிவன் டமரு' இசை ஒலித்தது.
முன்னதாக, அவர் கர்ம பந்தம் குறித்து ஒரு பதிவை பகிர்ந்து, "கர்மக் கடன்கள் தீரும்போது, உறவுகளும் முடிவுக்கு வருகின்றன" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் தனது மறைமுகப் பதிவுகள் மூலம் தனது கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வ