Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

Advertiesment
அஞ்சான்

vinoth

, வியாழன், 27 நவம்பர் 2025 (10:27 IST)
சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் லிங்குசாமி இயக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க என கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியுடன் உருவாகி 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸானது அஞ்சான் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. திரைக்கதை என்ற வஸ்து இல்லாமல் எடுக்கப்பட்ட அஞ்சானை இணையத்திலும், பத்திரிகைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத அளவுக்கு அந்த படத்தின் மீதும், இயக்குனர் லிங்குசாமியின் மீதும் ட்ரோல்கள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது 30 நிமிடக் காட்சிகளைக் குறைத்து மீண்டும் ரிலீஸ் செய்கிறார் லிங்குசாமி. இதையடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய அவர் “அஞ்சான் படம்தான் முதலில் ட்ரோலில் சிக்கிய படம். அப்போது நான் பேசிய வார்த்தைகளை வைத்து ட்ரோல் செய்தார்கள். அப்போது எங்கள் கம்பெனியான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றன. பலருக்கும் அதனால் பொறாமை இருந்தது. அந்த பொறாமை கூட தோல்விக்குக் காரணமாக இருக்கலாம். ” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!