Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

Advertiesment
ஏவிஎம் சரவணன்

Siva

, வியாழன், 4 டிசம்பர் 2025 (08:41 IST)
ஏவிஎம் புரொடக்ஷன்ஸின் உரிமையாளரும், தமிழ்த் திரையுலகின் முதுபெரும் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வியாழக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86.
 
ஏவி. மெய்யப்ப செட்டியாரால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற ஏவிஎம் நிறுவனத்தை, அவருக்கு பிறகு திரு. சரவணன் மிக திறம்பட நிர்வகித்து வந்தார். அவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல தலைமுறை நடிகர்களின் வெற்றிப் படங்களை தயாரித்தவர்.
 
'நானும் ஒரு பெண்', 'சம்சாரம் அது மின்சாரம்', 'மின்சார கனவு', 'சிவாஜி', 'வேட்டைக்காரன்', 'அயன்' போன்ற பல வெற்றி திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களையும் அவர் தயாரித்துள்ளார்.
 
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் சிகரம் விருது உட்பட பல சிறந்த திரைப்படங்களை தயாரித்ததற்காக எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார்.
 
வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவால் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் இருந்த ஏவிஎம் சரவணன், இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் மூன்றாவது தளத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 
 
இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏவிஎம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்