தமிழ் சினிமாவில் இயக்குனரின் பேரரசுவின் அறிமுகமே அமர்க்களமாக அமைந்தது. 2006 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் திருப்பாச்சி மற்றும் சிவகாசி என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார். இதையடுத்து அஜித்தை வைத்து திருப்பதி விஜயகாந்தை வைத்து தர்மபுரி மற்றும் பழனியை வைத்து பழநி மற்றும் திருத்தணி ஆகிய படங்களை இயக்கினார்.
ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர் படங்கள் தேய்வழக்கான மசாலாப் படங்களில் அவர் சிக்கிக் கொண்டதால் அவரது படங்கள் தோல்வி அடைய தொடங்கின. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக அவர் எந்த படங்களையும் இயக்கவில்லை. இடையில் அவர் நடிகராக சில படங்களில் தலைகாட்டினார்.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பேரரசு மீண்டும் இயக்குனராக ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்துக்கான திரைக்கதை மற்றும் முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவருகின்றன. ஜனவரி 2026-ல் படப்பிடிப்பு தொடங்கலாம் என சொல்லப்படுகிறது. விரைவில் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.