உலகளவில் தன்னுடைய ஆக்ஷன் படங்களின் மூலம் ரசிகர்களை உருவாக்கி வைத்திருப்பவர் ஜாக்கி சான். ஆனால் சமீபகாலமாக அவர் ஆக்ஷன் படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டு வருகிறார். ஆனாலும் அவர் ரசிகர்களுக்காக அவர் சில படங்களில் நடிக்கிறார். அப்படி கடைசியாக அவர் நடித்த படம் தான் கராத்தே கிட்ஸ்- லெஜண்ட்.
அதன் பிறகு அவர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் ஜாக்கி சான் சினிமா மூலமாக தான் ஈட்டிய இந்திய மதிப்பில் சுமார் 3000 கோடி ரூபாய் அளவிலான சொத்துகளை ஏழைகள் மற்றும் இயற்கைப் பேரிடர்களுக்குப் பயன்படுத்தும் விதமாக ஜாக்கி சான் சாரிடபிள் டிரஸ்ட்டுக்கு வழங்கிவிட்டார்.
இது குறித்து பேசியுள்ள ஜாக்கி சான் “நான் எனது சொத்துகளை எல்லாம் ட்ரஸ்ட்டுக்கு வழங்கிவிட்டதில் உனக்கு வருத்தம் இல்லையே எனக் கேட்டேன். அவன் “நானும் திறமைசாலிதான். நானே உழைத்து சம்பாதிக்க முடியும். உங்கள் வாரிசு என்பதற்காக மட்டுமே உங்கள் சொத்து எனக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை” எனக் கூறினான். அவனை நினைத்து எனக்குப் பெருமிதமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.