விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாரோ அதிலிருந்தே ஒரு நடிகன் நாட்டை ஆளலாமா? ஒரு நடிகன் கையில் நாட்டை கொடுக்கலாமா என்ற வகையில் பல விவாதங்கள் எழுந்தன. அதுவும் சினிமா துறையில் இருக்கிறவர்களே ஒரு சில பேர் விஜய்க்கு எதிராக பேசியும் வருகிறார்கள். அப்படிப்பார்த்தால் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களும் சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான்.
இன்று எஸ்.ஏ. சி மகன் என்பதையும் தாண்டி தனிப்பட்ட முறையில் விஜய் மீது சில பேர் வன்மத்தை கக்கி வருகின்றனர். முன்பு அவரின் செயல்கள், பல பேருக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று பல கோடிகளை உதறித்தள்ளிவிட்டு மக்களுக்காக அரசியலுக்குள் இறங்கியிருக்கிறார் விஜய். அவருடைய சுய நலத்தால்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றும் பல பேர் கூறி வருகிறார்கள்.
ஆனால் இன்று வரை விஜய் மக்களுக்காக மட்டுமே குரல் கொடுத்து வருகிறார். எப்படியாவது ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என போராடி வருகிறார். பல அரசியல் கட்சி தலைவர்கள் விஜயை குறை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இது அரசியலில் சகஜம் என அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் விஜயை பின்பற்றுவோர் ஒரு முட்டாள் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் கூறியுள்ளார். இதோ அவர் கூறியது:
விஜயின் உடல் மொழி வெளியே வரும் போது மெதுவாக வருவாரு. ஆனா அது அவர் இல்ல. 51 வயது நடிகர். வெளியே வரும் போது ஒன்னு இருக்கும். வீட்டிற்குள்ளே வேறு ஒன்னு இருக்கும். அவன நீ அரசியல் தலைவனா ஏத்துக்கிட்டு அவன் பின்னாடி போனா உன்னை விட முட்டாள் ஏமாளி யாரும் இருக்க மாட்டான். எப்போ நீ அவன பின்பற்றணும் என்றால் 5 வருஷம் அவன மனிதனா நடமாட விடு. அவன வெளியே திடலுக்கு வரவிடு. தனிப்பட்டவனா நடமாடட்டும்.
விஜய் என்ற நடிகனா இல்லாம ஜோசப் விஜய்யா அவனோட உணர்வுகளை நீ புரிஞ்சிக்கோ .இவன் நல்லவன், நம்ம மேல அக்கறை இருக்கு, தியாகம் செய்றவன், சகிப்புத்தன்மை உள்ளவன், பெரிய திட்டங்கள் தமிழ் நாட்டுக்காக வெச்சு இருக்கான், அத நீ எப்போ உணர்கிறாயோ அதுக்கப்புறம் பின்னாடி போய் நில்லு. ஆனா இப்போ நீ ஒரு நடிகன் பின்னாடி ஏமாந்து நிக்குற என்று ஜேம்ஸ் வசந்த் விஜயை பற்றி பேசியுள்ளார்.