உலக அளவில் பிரபல யூட்யூபராக உள்ள மிஸ்டர் பீஸ்ட் 40 கோடி சப்ஸ்க்ரைபர்களை தாண்டிய நிலையில் அவருக்கு சிறப்பான ஒரு ப்ளே பட்டன் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமே தொழில்நுட்ப வளர்ச்சி விரிவடைந்துவிட்ட நிலையில் யூட்யூப் ஒரு தவிர்க்க முடியாத விஷுவல் மீடியாவாக இருக்கிறது. யூட்யூபில் வீடியோக்கள் வெளியிடுவதையே முழு நேர தொழிலாக கொண்ட யூட்யூபர்களுக்கு இளைஞர்களிடையே பெரும் மரியாதையும் வரவேற்பும் உள்ளது. அப்படியாக உலக அளவில் பிரபலமாக உள்ள யூட்யூபர்களாக Mr Bease, I Show speed உள்ளிட்ட பலர் உள்ளனர்.
இதில் மிஸ்டர் பீஸ்ட் ஒரு சுயாதீன யூட்யூபராக பல பில்லியன்களை சம்பாதித்து வருகிறார், அதை கொண்டு பல மக்களுக்கும் உதவும் அவர் சமீபத்தில் ஆப்பிரிக்காவில் குழந்தைகளின் கல்விக்காக பல உதவிகளை செய்தார். இதுதவிர சொந்தமாக சில தொழில்களையும் செய்து வருகிறார்.
இவரது யூட்யூப் சேனல் சமீபத்தில் 40 கோடி சப்ஸ்க்ரைபர்களை தாண்டியது. இதன் மூலம் உலகில் அதிகமான சப்ஸ்க்ரைபர்களை கொண்ட முதல் யூட்யூபராக மிஸ்டர் பீஸ்ட் சாதனை படைத்துள்ளார். இதற்காக பிரத்யேகமாக ப்ளே பட்டன் ஒன்றை வடிவமைத்துள்ளது யூட்யூப் நிறுவனம், அதை யூட்யூப் CEO நீல் மோகனே நேரில் சென்று மிஸ்டர் பீஸ்டுக்கு வழங்கியுள்ளார்.
Edit by Prasanth.K