பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி பாகிஸ்தானில் இருந்தபோது அவருக்கு ஏகே 47 துப்பாக்கியுடன் 6 பேர் பாதுகாப்பில் இருந்தனர் என ஸ்காட்லாந்து யூடியூபர் நேரில் பார்த்ததாக கூறியுள்ளார்.
"Callum Abroad" என்ற யூடியூப் சேனலை இயக்கும் ஸ்காட்லாந்து யூடியூபர் கல்லம் மில், கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் சென்றபோது, லாகூரின் பிரபலமான அனார்கலி சந்தையில் எடுத்து வெளியிட்ட வீடியோவில் ஜோதி ஏகே-47 துப்பாக்கிகள் பாதுகாப்புடன் இருந்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோதியிடம் பேசிய கல்லம், பாகிஸ்தானுக்கான முதல் பயணமா எனக் கேட்டபோது, அவர் “ஐந்தாவது முறை” என பதிலளிததாகவும், மேலும், பாகிஸ்தானில் கிடைத்த வரவேற்பு பற்றி “அருமை” எனச் சொன்னதாகவும் கல்லம் கூறினார்.
மேலும் அவர் ஏன் ஒரு இந்திய யூடியூபருக்கு பாகிஸ்தானில் இவ்வளவு பாதுகாப்பு தேவை? என்ற சந்தேகம் தனக்கு அப்போதே ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் ஜோதி பாகிஸ்தானில் இருந்தபோது சக்தி வாய்ந்த ஒரு நபராக வலம் வந்திருப்பார் என்பது தெரிய வந்துள்ளது