Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் உளவாளியோடு நெருக்கம்.. வாட்ஸப்பில் காதல் சாட்? - அதிர்ச்சி தரும் யூட்யூபர் ஜோதி விவகாரம்!

Advertiesment
Youtuber Jyoti Pakistan connection

Prasanth Karthick

, வியாழன், 22 மே 2025 (09:50 IST)

பாகிஸ்தான் உளவு அமைப்போடு தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட யூட்யூபர் ஜோதி விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவியதாக இந்தியாவை சேர்ந்த சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் ஹரியானாவை சேர்ந்த யூட்யூபர் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர். கடந்த 2023ம் ஆண்டு முதலாக பலமுறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்த ஜோதி, பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

 

சமீபத்தில் ஜோதியின் டைரி கைப்பற்றப்பட்ட நிலையில் அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவர் எழுதியிருந்த விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது செல்போனை ஆய்வு செய்ததில் அவர் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியுடன் காதலில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

 

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் அதிகாரி அலி ஹசன் என்பவருடன் ஜோதி நெருக்கமான பழக்கத்தில் இருந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அவர் வாட்ஸப்பில் உரையாடியுள்ளார். மேலும் சில சங்கேத குறியீட்டு மொழிகளிலும் அவர்களுக்குள் உரையாடல்கள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் ஜோதியின் 4 வங்கி கணக்குகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம்!