பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திரா மற்றும் தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலன் என்பவர் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வெளியாகியுள்ள செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி போராட்டம் ஒன்றில் பேசிய ஜெயபாலன், பிரதமர் மோடியை "அரக்கன்" என்று ஒப்பிட்டுக் கூறி, "அவரை ஒழித்தால் தான் தமிழகத்திற்கு நன்மை" என்று பேசிய காணொலி வைரலாகி வருகிறது. இது பிரதமரின் உயிருக்கு விடுக்கப்பட்ட வெளிப்படையான மிரட்டல் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த மிரட்டலை கண்டித்ததோடு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பினார். அருகில் இருந்த தென்காசி எம்.பி. மற்றும் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வின் மௌனத்தையும் விமர்சித்த அவர், ஜெயபாலனை உடனடியாக கைது செய்யுமாறு திமுக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.