Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட புரோமோஷனுக்காக என்னெல்லாம் பண்ண வேண்டியிருக்கு? பிக்பாஸ் வீட்டில் கீர்த்தியின் மைண்ட் வாய்ஸ்

Advertiesment
bigg boss 9

Bala

, புதன், 26 நவம்பர் 2025 (13:57 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 9ல் கடைசியாக வெளியேறினார் கெமி. அந்த எவிக்‌ஷனில் ட்விஸ்ட் வைத்து விஜய் சேதுபதி  கொஞ்சம் ஆட்டம் காட்டினார். பிரஜனையும் கெமியையும் வெளியேற்றி பிரஜனை மறுபடியும் உள்ளே அனுப்பி ரசிகர்களுக்கும் ட்விஸ்ட்டாகத்தான் இருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சி 51 நாள்கள் கடந்து கொண்டு இருக்கிறது.
 
ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து சண்டை சச்சரவு இரைச்சல் என மக்களை எரிச்சலூட்டும் விதமாகவே இந்த சீசன் இருந்து வந்தது. பல துறைகளில் இருந்து பிரபலமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். 
 
ஆடியன்ஸை கவரும் விதமாக பிக்பாஸ் வீட்டில் பல வகையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு உள்ளே இருக்கும் போட்டியாளர்களையும் எப்பவுமே பிஸியாகவே வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பட ப்ரோமோஷனையும் பிக்பாஸ் வீட்டில் கொண்டு வந்து அவர்களுக்கு ஒருவித உற்சாகத்தை கொடுத்து வருகிறார் பிக்பாஸ்.
 
அந்த வகையில் இந்த வாரம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் ரிவால்வர் ரீட்டா படத்தின் புரொமோஷனுக்காக கீர்த்தி சுரேஷ் இன்று பிக்பாஸ் வீட்டில் நுழைந்திருக்கிறார். ஒரு முன்னணி ஹீரோயின். நம்ம வீட்டிற்குள் வந்திருக்கிறார் என்றதும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சந்தோஷம். ஆனால் கீர்த்தி சுரேஷின் மன நிலை எப்படி இருக்கும் என்பதை நெட்டிசன்கள் மீம்ஸ் மூலமாக பதிவிட்டு வருகின்றனர்.
webdunia
 




























அதாவது ஒரு பட புரோமோஷனுக்காக  சொல்றதலாம் கேட்க வேண்டியதா இருக்கே என்று நினைப்பதை போல் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். ஆனால் ஆரம்பத்தில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை பொதுமக்கள் உட்பட இப்படித்தான் விமர்சித்தார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்த விஜய் பட நடிகை.. காவல்துறை அதிகாரி கேரக்டரா?