கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ராதிகா சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜேகே சந்த்ரு இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே சரஸ்வதி சபதம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். தி ரூட் , தி ஃபேஷன் ஸ்டீடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே முடிவடைந்து விட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸாக வேண்டியது. ஆனால் ஏதோ சில காரணங்களால் வெளியாக முடியவில்லை. அதன் பிறகு நவம்பர் மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை போல நவம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரகு தாத்தா.
ஆனால் எதிர்பார்த்த வெற்றியை அந்தப் படம் ருசிக்கவில்லை. சரிவை கண்டது. அதனால் ஒரு சரியான வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் ரிவால்வர் ரீட்டா கைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அவர் திருமணத்திற்கு பிறகு எந்தவொரு படமும் சரிவர அமையவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
அதனால் இந்தப் படத்தின் மீது அதிகளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. டிரெய்லரில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கியை கையில் ஏந்தி எதிரிகளை துவம்சம் செய்கிறார். ஒரு காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. கூடவே ராதிகா சரத்குமாரின் ஹியூமரும் நல்ல முறையில் உதவியிருப்பதாகவும் தெரிகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.