பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 6 வாரங்களை கடந்துள்ள நிலையில், கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார். மொத்தம் 20 போட்டியாளர்களில் 8 பேர் வெளியேறிய நிலையில், இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் உள்ளனர்.
இந்த வாரம் நடைபெற்ற "சோறு, சோப்பு, மாப்பு" டாஸ்க்கில் விக்கல்ஸ் விக்ரம் தலைமையிலான 'மாப்பு' அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று வெளியான புரொமோவில், பிரஜின் மற்றும் விக்கல்ஸ் விக்ரம் இடையே கடுமையான மோதல் வெடித்தது. தனது மனைவி சாண்ட்ராவை விக்ரம் பேசியது குறித்து ஆத்திரமடைந்த பிரஜின், "நான் உங்களுக்கு வார்னிங் கொடுக்கிறேன். பின்னால் நின்று முதுகில் குத்தினால், நான் என்ன செய்வேன் என்று தெரியாது" என்று கடுமையான தொனியில் எச்சரித்தார்.
ஆனால், விக்ரம், "நான் உங்கள் முன்னால்தான் நிற்கிறேன்" என்று கூலாக பதிலளித்தார். இந்த சலசலப்பு இந்த வார நிகழ்ச்சியில் விறுவிறுப்பை அதிகரித்துள்ளது.