பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் வீட்டின் விதிகளை மீறியதற்காகவும், மோசமாக விளையாடியதற்காகவும் இரு போட்டியாளர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் சக போட்டியாளர்களின் பரிந்துரையின் பேரில், பார்வதி மற்றும் கம்ருதின் ஆகிய இருவரையும் சிறைக்கு அனுப்ப பிக் பாஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வாரம் கொடுக்கப்பட்ட 'பிக் பாஸ் ஜூஸ் ஃபேக்டரி' என்ற டாஸ்க்கில் பார்வதி தர சரிபார்ப்பாளராக செயல்பட்டார். அப்போது சக போட்டியாளர்களுடன் வழக்கம்போல் இவருக்கு மோதல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாகவே, மோசமாக விளையாடியவர்கள் பட்டியலில் பெரும்பாலானோர் பார்வதியை தேர்ந்தெடுத்தனர்.
கம்ருதின், மற்றொரு போட்டியாளரான துஷாருடன் ஏற்பட்ட மோதலின்போது, அவரை தள்ளிவிட்டது, "வெளியே வந்தால் தலையை திருப்பிவிடுவேன்" என்று மிரட்டல் விடுத்தது போன்ற காரணங்களுக்காக அவர் மீது சக போட்டியாளர்கள் புகார் அளித்து, சிறைக்கு அனுப்பப் பரிந்துரைத்தனர்.
சிறை தண்டனை அறிவிக்கப்பட்டபோது, வீட்டின் மற்றொரு போட்டியாளரான கலையரசன் மற்றும் அரோரா ஆகியோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது போன்ற புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.