தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ஜாம்பவானாக தயாரிப்பு நிறுவனத்தில் இருந்தவர் ஏவிஎம் சரவணன். இன்று அவர் உடல்நிலை காரணமாக காலமானார். இந்த செய்தி தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. எண்ணற்ற வெற்றி படங்களை கொடுத்தவர். எம்ஜிஆர், சிவாஜி ,ரஜினி ,கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், விஜய், அஜித், சூர்யா என அத்தனை தலைமுறை நடிகர்களுடனும் சேர்ந்து பணிபுரிந்தவர். ஏன் அந்த நடிகர்களின் வாழ்க்கையை மாற்றிப் போட்ட பல திரைப்படங்களை தயாரித்தவர் ஏவிஎம் சரவணன் தான்.
இவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்த ரஜினி கூட ஏவிஎம் நிறுவனத்தில் ஒன்பது படங்கள் நான் நடித்திருக்கிறேன். அந்த ஒன்பது படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் எனக் கூறியிருந்தார். அதில் முரட்டுக்காளை மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த திரைப்படம். அதேபோல சிவாஜி பிரம்மாண்டமாக தயாரித்த திரைப்படம். அதுவும் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்தும் ரஜினியை வைத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்திருந்தாராம் சரவணன். ஆனால் அது நடக்கவில்லை என மிக வருத்தத்துடன் கூறினார் ரஜினி.
அதைப்போல சூர்யா நடித்த அயன் திரைப்படத்தையும் ஏவிஎம் சரவணன் தான் தயாரித்திருந்தார். இப்படி பல திரைப்படங்களை எடுத்து மாபெரும் வெற்றி கொடுத்த ஏ வி எம் சரவணன் இன்று நம்மிடம் இல்லை. இந்த நிலையில் அவருடைய பழைய பேட்டி ஒன்று சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகின்றது. ஆரம்பத்தில் அவருடைய கம்பெனியில் ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவாக தான் பணிபுரிந்தாராம் ஏவிஎம் சரவணன். மாமியார் மெச்சின மருமகள் மற்றும் தெய்வ பிறவி போன்ற இரண்டு திரைப்படங்களுக்கு புரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவாக பணிபுரிந்து இருக்கிறார் ஏவிஎம் சரவணன்.
அதில் மாமியார் மெச்சின மருமகள் திரைப்படம் 1959 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரன், எம் என் ராஜம் ஆகியோர் முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மராட்டிய திரைப்படத்திலிருந்து ரீமேக் செய்த திரைப்படம் தான் இந்த மாமியார் மெச்சின மருமகள் .கிருஷ்ணன் பஞ்சுவை வைத்து இந்த படத்தை ஏவிஎம் சரவணன் எடுத்திருக்கிறார். படத்தில் அமைந்த அதனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் கிளாசிக்கல் ஸ்டைலில் இருந்திருக்கிறது .எஸ் எஸ் ராஜேந்திரன் அந்த சமயத்தில் வசனங்கள் பேசுவதில் ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்தவர் .
பராசக்தி படத்தில் அவருடைய வசனம் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த மாதிரி இந்த படத்திலும் அவருக்காக வசனங்கள் எல்லாம் அற்புதமாக எழுதப்பட்டிருக்கின்றன . மாமியார் மெச்சின மருமகள் படம் ரிலீஸ் ஆகி முதல் முறை தயாரிப்பு நிர்வாகம் சரவணன் என டைட்டிலில் இவருடைய பெயர் வந்திருக்கிறது. தியேட்டரில் முதல் நாள் ரசித்தார்களாம் .இரண்டாவது நாள் ரசித்தார்களாம். மூன்றாவது நாள் படம் பார்க்க ஆளே வரவில்லையாம் .
அதனால் ஏவிஎம் சரவணனுக்கு மனது மிகவும் உடைந்து விட்டதாம். முதல் படம் இப்படி ஆகிப்போச்சு என மிகவும் வருத்தத்தில் இருந்திருக்கிறார். அந்த வருத்தம் 31 வருடம் கழித்து அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதே படத்தை 31 வருஷம் கழித்து பாட்டி சொல்லை தட்டாதே என்ற பெயரில் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப அதே கதையை திருப்பி எடுத்து இருக்கிறார் ஏவிஎம் சரவணன். அது சில்வர் ஜூப்ளி கண்ட படமாக மாறியதாம். இதை ஒரு பேட்டியில் ஏவிஎம் சரவணன் கூறியுள்ளார்