ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் வாரனாசி படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. ஒரிசா மற்றும் கென்யாவில் அடர் காட்டுப் பகுதிகளில் ஷூட்டிங் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக வாரணாசி செட் அமைத்துக் காட்சிகளை எடுக்கவுள்ளார் ராஜமௌலி.
இந்நிலையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்காக ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு ஆகிய இருவரும் பெறும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ராஜமௌலி 200 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் இலாபத்தில் பங்கு என சம்பளம் வாங்கவுள்ளாராம். அதுபோல மகேஷ் பாபு 100 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் இலாபத்தில் பங்கு பெறவுள்ளாராம்.