ஷாருக் கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தீபிகா படுகோன். அந்த படத்தின் இமாலய வெற்றியை அடுத்து பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
சக நடிகர் ரண்வீர் சிங்கைத் திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தொடர்ந்து சினிமாவில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அட்லி- அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகிவரும் பிரம்மாண்டமானப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் அவர் எட்டு மணி நேர வேலை நேரம் கேட்டதால் அவர் ஸ்பிரிட் மற்றும் கல்கி 2 ஆம் பாகம் ஆகிய படங்களில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த சர்ச்சைகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதில் “இப்போது எனது முக்கியத்துவங்கள் மாறியுள்ளன. நான் இப்போது ஆரோக்யமான பனிச்சூழல் உள்ள கதைகளைத் தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.